Tuesday, April 3, 2007

முதியோர் கல்விக்கு முன்னரே

இது தான் தோன்றுகிறது பெரும்பான்மையான தமிழக பெண்களை பார்க்கும் போது. ஒரு வீடு மட்டும் அல்ல, சுற்றத்தார், உறவினர்கள், சமுதாயம் இப்படி எல்லோரும் நல்லவர்களாக, இன்புற்று இருக்க பெண் கல்வி மிக அவசியமாக தோன்றுகிறது... தமிழகத்தில் பெண்கள் கல்வி இல்லாமல், சரியான தொலைநோக்கு பார்வை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 90 சதவிகிதத்தை தாண்டும். இதை அனைவரும் அறிந்ததே. அரசாங்கமும் நன்கு அறியும்.

இப்படி இருக்கையில் படிக்கதா பெண்களுக்ககா ஏன் கல்வியும் , வாழ்க்கையின் போதனைகளும் சொல்லி தருவதற்க்கான ஏற்பாடு செயவில்லை., முதியோர் கல்வி ஒன்று ஆரம்பித்தது போல. முக்கியாமாக, குடும்ப பெண்களுக்கு சரியான வழி காட்ட ஏன் எந்த வகையான பாடமோ,சமுதாய நோக்கமோ கற்று தர வில்லை. ஏழை பெண்களுக்கும், படிப்பறிவில்லாத பெண்களுக்கும் சலுகைகளை (பணமோ, கடனுதவியோ, இல்லை எதாவது உதவி குழுக்கலோ...) வழங்குவதால் குடும்ப முன்னேற்றத்துக்கோ இல்லை சமுதாயா முன்னேற்றத்துக்கோ வழி வகுக்க வில்லை. இது தான் உண்மை. கடந்த காலங்களை பின்னோக்கி பார்த்தால், அது நன்றாகவே விளங்கும். இப்படி பட்ட சலுகைகளாலும், உதவிகளாலும், தமிழக பெண்கள் நிரந்தரமாக, நிம்மதியாகவும், தெளிவாகவும் வாழ உறுதுணையாக இருந்ததில்லை. அவர்களின் அறியாமையும், ஏழ்மையும், கிராம குடும்ப சூழ்நிலையும் ஒன்று சேர , ஒரு புரியாத புதிராகவே வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்... அதிலும் கணவனும் படிக்காதவனா இல்லை, குடிகாரனாக இருந்து விட்டால், அந்த பெண்ணின் உணர்வுகளை சொல்லவே முடியாது. கொடுமையுலும் கொடுமை. இப்படி பட்ட நிலமை, இன்னமும் தமிழகத்தில் இருக்கவே செய்கின்றன.

இனியாவது அரசாங்கமும் சரி, சமூக அமைப்புகளும் சரி, பெண்களுக்கு முதலில் கல்வி அறிவும், வாழ்வியல் அறிவும், உலகவியில் அறிவும் கற்று தர வேண்டும். அதை விடுத்து வெட்டி பேச்சுகளிலும் , வீண் காரியங்களிலும் காலத்தை வீணாக்காமல் - அது பெண்களாக இருந்தாலும் சரி இல்லை அரசாங்கமாக இருந்தாலும் சரி, தமிழக பெண்களுக்கு குறிப்பாக படிக்காத குடும்ப பெண்களுக்கு சரியான வழிகாட்டலும், சரியான வாழ்க்கை நெறியும் போதிக்க வேண்டும். இதுவே அந்த குடும்ப்பதின் செழுமைக்கும், அவர்களின் குழந்தைகளின் வருங்காலந்துக்கும் மிகவும் பயனுல்லதாக இருக்கும். அதுவே வருங்கால சமுதாயத்தை நல்வழியில் எடுத்து செல்லும். நல்ல சமுதாயமே நம் நாட்டின் முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்லும்.

எனக்கென்னவொ, முதியோர் கல்விக்கு அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகளை, தமிழக , படிக்காத குடும்ப பெண்களுக்கு அதிக முக்கியத்துவமும், முயற்சிகளையும் எடுத்து இருந்து இருந்தால் அந்த நேரம், இப்ப இருக்கிற இளைய சமுதாயம் இன்னமும் நன்றாகவே இருந்து இருக்கும் என தோன்றுகிறது இந்த நேரம்....

Thursday, March 29, 2007

அறியாமையும் ஆணவமும்

செய்திகளை கேட்கும் போதும் மற்றும் சில நிகழ்ச்சிகளை பார்க்கும் போது மனசுக்குள்ளே ஏதொ கசுப்பு தன்மை மிஞ்கிறது. பொதுவாகவே தமிழ் குடும்பங்களில் பார்க்கும் இது தான் தோன்றுகிரது.

கிராமங்களில் பெண்களின் நிலை மிக மோசமாக உள்ளது. காரணம் அவர்களுக்கு முதலில் ஊர் உலகம் பற்றி அதிகமாக தெரிய வில்லை போலும். காரணம் படிக்காததோ இல்லை முன் அனுபவம் இல்லாததோ இருக்கலாம். ஒரு அடிமைத் தனம் போல புருசனுக்கோ இல்ல குடும்பத்துக்கோ உழைப்பதும் காரணமாக இருக்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலையால், சில நேரங்கலில் சில தவறுகளை செய்ய நேறுடுகிரது. அதனால் அவர்கள் பாதிக்க படுவதும் உன்மையாகவே தெரிகிறது. இது அந்த பெண்கலின் அறியாமையால் நடக்கிறது. விவாகரத்துக்கு விவரமே இல்லமால் போகிறது. பற்றிக் கொண்டு வாழ பாசமே முதற்ன்மையாக இருக்கிறது.

இதற்கு நேர் மாறாக நகரங்களில் நடக்கிறது. படித்த பெண்களும் அனுபவம் வாய்ந்த பெண்களும் சந்தோசமாகவே இருகிறார்கள், ஆனால் அவர்களின் வாழ்க்கை சந்தேகமாகவே உள்ளது. பிடிப்பு இல்லமாலே வாழ படிப்பு கற்று கொடுத்து இருக்கின்றன. ஆணவம் தலைக்கு ஏறி போகிறது. விவரமாக இருப்பதால் விவாதமே வினையாகிற்து. விவாகரத்துக்கு இது வித்துடுகிறது.

அறியாமையால் ஆணவம் இல்லையா இல்லை, ஆணவம் இருப்பது அறியாமை இல்லததாலா?

இப்படி சொல்வதால் ஆணவ பெண்கள் கிராமத்தில் இல்லை என்றும், அறியாமை பெண்கள் நகரத்தில் இல்லை என்றும் அர்த்தம் இல்லை.

எனக்கு இன்னமும் பதில் தெரியாமலே இருக்கிறது ஆணவம் வந்தது பணமா? அறியாயின்மையா? அனுபவமா? குணமா?

அறியாமையாக இருப்பது தவறா ?
ஆணவமாக இருப்பது தவறா ?

இரண்டுமே தவறு என்றால் சந்தோசத்திற்கு இடமேது வாழ்க்கையில்?

Monday, March 26, 2007

யாரை சொல்லி குற்றம்..?

சமீப்பத்தில் (3rd Week,Mar07) ஒரு கோவை சிறுமிக்கு நடந்த கோர நிகழ்ச்சி பற்றி நினைவு கூர்கிறேன். இது தான்... நடந்தது. 34 வயது ஒருவனும், 8 வது படிக்கும் 13 வயசு கேர்ளும், நெருக்கமாக பழகி வந்தார்கள். இவர்கள் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். சம்பவத்தன்று அந்த சிறிமியின் பள்ளிக்கு சென்று, வீட்டிற்கு அழைத்து வரும் வழியில், அந்த சின்ன பொண்ணை, கெடுக்க முயற்சி செய்து இருக்கிறார். அவர் முயற்சிக்கு பிறகு அந்த சின்ன பொண்ணு ஒத்து வராததால், பக்கத்தில் இருந்த கம்பிய எடுத்து தலையில் அடித்து இருக்கிறார். அந்த பிஞ்சு உள்ளம் அந்த இடத்திலேயே உயிரை விட்டது.

யாரோட குற்றம்?
அந்த சின்ன பொண்ணோட தப்பா? -அவனோடா நெருங்கி பழகியதால?
அந்த ஆளோட தப்பா? - கோர புத்தி உள்ளவனு யாருக்கும் தெரியாமல் போனதா?
அந்த பொண்ணோட பெற்றோர்கள் தப்பா? - கண்டு கொள்ளாமல் சின்ன பொண்ணு தான் என்று இருந்தாலா ?
அந்த பள்ளியோட தப்பா? - அவர்களின் கண்டிப்பு இல்லாத, கவனம் இல்லாத போக்கா?
சமுதாயத்தோட தப்பா? - இது வரை இந்த தமிழ் மண்ணில் இது போன்ற தவறுகளுக்கு சரியான தண்டனை தராததாலா?,
அந்த ஆளோட பெற்றொர்கள் தப்பா- அவர்களின் வளர்ப்பு முறை சரி இல்லாததா?

இல்லை

[படிப்பதற்க்கு வசதியாக ] அந்த பொண்ணை படைத்த கடவுளும் , விதியை தந்த எமனும் செய்த தப்பா?

யாரை சொல்லி குற்றம்..?


முடிவு:
இது போன்ற சம்பவங்கள் உலகின் எல்லா மூலைகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில இடங்களில் சம்மதத்தோடவும், சில இடங்களில் இல்லமாலும் நடக்கிறது.
சொல்வதெல்லாம் சம்மந்தம் இல்லாமல் சம்மதம் இல்லாமல் தய்வு செய்து சாவு மணி அடிக்காதீர்கள்.

காசு கொடுத்தால் ஆள் கிடைக்கும். அங்கே தேடி போங்கள். விவரம் இல்லை என்றால் நாலு பேரை கேட்டு பாருங்கள். அதை விட்டு, அறியாத மொட்டுகளை அழிக்காதீர்கள் அவசர பட்டு.

Saturday, March 24, 2007

Tamil Women Issues

This blogsite talks about the issues and problems of tamil women in the society and in the family. If you come across, seeing tamil women , issues,crisis in tamil nadu, please email the details to inrs2000@gmail.com