இது தான் தோன்றுகிறது பெரும்பான்மையான தமிழக பெண்களை பார்க்கும் போது. ஒரு வீடு மட்டும் அல்ல, சுற்றத்தார், உறவினர்கள், சமுதாயம் இப்படி எல்லோரும் நல்லவர்களாக, இன்புற்று இருக்க பெண் கல்வி மிக அவசியமாக தோன்றுகிறது... தமிழகத்தில் பெண்கள் கல்வி இல்லாமல், சரியான தொலைநோக்கு பார்வை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 90 சதவிகிதத்தை தாண்டும். இதை அனைவரும் அறிந்ததே. அரசாங்கமும் நன்கு அறியும்.
இப்படி இருக்கையில் படிக்கதா பெண்களுக்ககா ஏன் கல்வியும் , வாழ்க்கையின் போதனைகளும் சொல்லி தருவதற்க்கான ஏற்பாடு செயவில்லை., முதியோர் கல்வி ஒன்று ஆரம்பித்தது போல. முக்கியாமாக, குடும்ப பெண்களுக்கு சரியான வழி காட்ட ஏன் எந்த வகையான பாடமோ,சமுதாய நோக்கமோ கற்று தர வில்லை. ஏழை பெண்களுக்கும், படிப்பறிவில்லாத பெண்களுக்கும் சலுகைகளை (பணமோ, கடனுதவியோ, இல்லை எதாவது உதவி குழுக்கலோ...) வழங்குவதால் குடும்ப முன்னேற்றத்துக்கோ இல்லை சமுதாயா முன்னேற்றத்துக்கோ வழி வகுக்க வில்லை. இது தான் உண்மை. கடந்த காலங்களை பின்னோக்கி பார்த்தால், அது நன்றாகவே விளங்கும். இப்படி பட்ட சலுகைகளாலும், உதவிகளாலும், தமிழக பெண்கள் நிரந்தரமாக, நிம்மதியாகவும், தெளிவாகவும் வாழ உறுதுணையாக இருந்ததில்லை. அவர்களின் அறியாமையும், ஏழ்மையும், கிராம குடும்ப சூழ்நிலையும் ஒன்று சேர , ஒரு புரியாத புதிராகவே வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்... அதிலும் கணவனும் படிக்காதவனா இல்லை, குடிகாரனாக இருந்து விட்டால், அந்த பெண்ணின் உணர்வுகளை சொல்லவே முடியாது. கொடுமையுலும் கொடுமை. இப்படி பட்ட நிலமை, இன்னமும் தமிழகத்தில் இருக்கவே செய்கின்றன.
இனியாவது அரசாங்கமும் சரி, சமூக அமைப்புகளும் சரி, பெண்களுக்கு முதலில் கல்வி அறிவும், வாழ்வியல் அறிவும், உலகவியில் அறிவும் கற்று தர வேண்டும். அதை விடுத்து வெட்டி பேச்சுகளிலும் , வீண் காரியங்களிலும் காலத்தை வீணாக்காமல் - அது பெண்களாக இருந்தாலும் சரி இல்லை அரசாங்கமாக இருந்தாலும் சரி, தமிழக பெண்களுக்கு குறிப்பாக படிக்காத குடும்ப பெண்களுக்கு சரியான வழிகாட்டலும், சரியான வாழ்க்கை நெறியும் போதிக்க வேண்டும். இதுவே அந்த குடும்ப்பதின் செழுமைக்கும், அவர்களின் குழந்தைகளின் வருங்காலந்துக்கும் மிகவும் பயனுல்லதாக இருக்கும். அதுவே வருங்கால சமுதாயத்தை நல்வழியில் எடுத்து செல்லும். நல்ல சமுதாயமே நம் நாட்டின் முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்லும்.
எனக்கென்னவொ, முதியோர் கல்விக்கு அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகளை, தமிழக , படிக்காத குடும்ப பெண்களுக்கு அதிக முக்கியத்துவமும், முயற்சிகளையும் எடுத்து இருந்து இருந்தால் அந்த நேரம், இப்ப இருக்கிற இளைய சமுதாயம் இன்னமும் நன்றாகவே இருந்து இருக்கும் என தோன்றுகிறது இந்த நேரம்....
Tuesday, April 3, 2007
Subscribe to:
Posts (Atom)